×

ரூ.116 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பாப் பாடகி ஷகிராவுக்கு 8 ஆண்டு சிறை

பார்சிலோனா: கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா (45), கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டில் இருந்தபோது, 116 கோடி ரூபாய் வருமானத்துக்கான வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தவறை ஒப்புக்கொண்டு வரி செலுத்துமாறு ஸ்பெயின் வழக்கறிஞர்கள் சார்பில் ஷகிராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தான் அந்த காலக்கட்டத்தில் ஸ்பெயினில் வசிக்கவில்லை என்றும், தனது காதலன் பார்சிலோனா கால்பந்து வீரர் ஜெரார்டு பிக் (35) என்பவருடன் பஹாமாஸ் நாட்டில் வசித்ததாகவும் கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதுபற்றி ஸ்பெயின் நாட்டு வழக்கறிஞர்கள் அமைப்பினர் கூறுகையில், ‘பாடகி ஷகிரா 2011ல் ஸ்பெயினில் குடியேறி விட்டார். பஹாமாஸ் நாட்டில் சொந்த வீடு இருக்கிறது. வருமான வரி வழக்கின் மனுவை ஷகிரா நிராகரித்துள்ள நிலையில், அவர்மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் வரி ஏய்ப்புக்காக 150 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்’ என்றனர். …

The post ரூ.116 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பாப் பாடகி ஷகிராவுக்கு 8 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Shakira ,Barcelona ,Colombia, Spain ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…