×

போடியில் பட்டப்பகலில் மாஜி ராணுவ வீரர் படுகொலை

போடி: போடியில் நேற்று பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரரை, கேரள ஜீப்பில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (71). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். காமராஜர் சாலையில்  லாட்ஜ் நடத்தி வந்தார். மனைவி இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல், ராதாகிருஷ்ணன் தனது லாட்ஜ்க்கு டூவீலரில் சென்றார். போடி தலைமை தபால்நிலையம் அருகே சென்றபோது, எதிரே வழிமறித்து நின்ற கேரள பதிவெண் கொண்ட ஜீப்பில் இருந்து அரிவாளுடன் இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல், ராதாகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அந்த கும்பல் ஜீப்பில் ஏறி தப்பியது. தகவலறிந்து வந்த போடி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். முன்விரோதத்தால் யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.போடியில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் லாட்ஜ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post போடியில் பட்டப்பகலில் மாஜி ராணுவ வீரர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Maji ,Bodil ,Gradhal ,Bodi ,Kerala ,Jeep ,
× RELATED நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி...