×

புத்துணர்வு முகாமில் உற்சாகமாக பசியாறும் யானை; ஆச்சரியமாக வேடிக்கை பார்க்க திரளும் மக்கள்

பாலக்காடு:  பாலக்காடு அருகே புத்துணர்வு முகாமில் பங்கேற்ற வளர்ப்பு யானை, பாகன் கட்டளைக்கு கட்டுப்பட்டு, உற்சாகமாக பசியாறும் காட்சியை அப்பகுதியினர் திரளாக கூடி ரசித்து சென்றனர். பாலக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. பாலக்காடு மாவட்டம் மங்கலாம் குன்றை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கு 14க்கு மேற்பட்ட வளர்ப்பு யானைகள் இருந்தன இவற்றில் சில யானைகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன. இந்நிலையில் தற்போது 4 யானைகள் மட்டுமே  வளர்த்து வருகின்றனர். இந்த யானைகளுக்கு ஆடி, ஆவணி ஆகிய 2 மாதங்கள் புத்துணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, வளர்ப்பு யானைகளில் ஒன்றான கணேசன் என்னும் யானை பல்லசேனா அருகே யானை பாகன் நேரடி கவனிப்பில் புத்துணர்வு முகாமில் வைத்து பராமரிக்கப்படுகிறது. இந்த யானைக்கு குளியல், நடைபயிற்சி, எடை அளவு ஆய்வு என தினமும் உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மூலிகை கலந்த சத்தான உணவுகள், உருளை பழ வகைகள், தர்பூசணி, அண்ணாச்சி பழம், கரும்பு, சர்க்கரை வெல்லம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 2 மாத காலம் காயங்களுக்கு மருந்து மாத்திரைகளும், கால்நடை மருத்துவர்கள் நேரடியாக கண்காணித்து, யானை பாகன்கள் மூலம் வழங்கி வருகின்றனர். இந்த யானை, பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதை அப்பகுதியினர் திரளாக ரசித்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர்….

The post புத்துணர்வு முகாமில் உற்சாகமாக பசியாறும் யானை; ஆச்சரியமாக வேடிக்கை பார்க்க திரளும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Pagan ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...