×

இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போட்டு போலி சான்றிதழ் தந்த ஏட்டு சஸ்பெண்ட்

சுசீந்திரம்: சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு, பத்திரங்கள் மிஸ்சிங் சான்றிதழ் வழங்கிய போலீஸ் ஏட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குமரி மாவட்டத்தில் புரோக்கர்கள் சிலர் உதவியுடன், சில காவல் நிலையங்களில் சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடப்பதாக எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத்துக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி காவல் நிலையங்களில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் கையெழுத்துடன் வழங்கப்பட்ட பத்திரங்களுக்கான மிஸ்சிங் சான்றிதழில் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி விசாரணை நடத்திய போது, அவருக்கே தெரியாமல் அவரது கையெழுத்து போலியாக போடப்பட்டு பத்திரங்கள் மிஸ்சிங் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த மேல் விசாரணையில், சுசீந்திரம் காவல் நிலையத்தில் எழுத்தர் பணியில் இருக்கும் போலீஸ் ஏட்டு கோபால் (39) தான், போலியாக இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்டு சான்றிதழ் தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வினியோகம் செய்த சான்றிதழ்கள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து தற்போது ஏட்டு கோபாலை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டால் கோபால் கைது செய்யப்படவும் வாய்ப்பு உண்டு? என்றும் போலீசார் கூறினர்….

The post இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போட்டு போலி சான்றிதழ் தந்த ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Suchindram ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...