×

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ: குடியாத்தத்தில் வியப்பு

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று பூத்தது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாக கூறப்படும் பூக்களில் முக்கியமானது பிரம்ம கமலம்.இமயமலையில் பூர்வீகமாக கொண்ட இந்த பூ ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும். இது இரவில் மலர்ந்து பகலில் வாடிவிடும். மலர் பூப்பதை பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மக்கள் கூறுகின்றனர். மருத்துவ குணம் நிறைந்த இந்த பூ, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் காலனியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை சத்யா என்பவரது வீட்டில் பூத்துள்ளது. இதுகுறித்து ஆசிரியை சத்யா சரவணன் இன்று கூறுகையில், நேற்றிரவு 8 மணிக்கு இந்த பூ பூக்க தொடங்கி அதிகாலை 2 மணிக்கு விரிவடைந்தது. அதிகாலை வரை தூங்காமல் விழித்திருந்து பூ மலரும்போது பூஜை செய்து வழிபட்டோம். இதனை அருகில் உள்ளவர்களும் பூவை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு சென்றனர்’ என தெரிவித்தார்….

The post ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ: குடியாத்தத்தில் வியப்பு appeared first on Dinakaran.

Tags : Gudiyattam ,Kudiatham ,Lord ,Shiva ,
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்