×

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை: சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணைகள் நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் தேனி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இரண்டே நாட்களில் 30அடி உயர்ந்து உள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் தற்போது நீர்மட்டம் 100.36 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 213 கனஅடியாக உள்ளது. இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை நெருங்கியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் தேனி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.            …

The post அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை: சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணைகள் நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி… appeared first on Dinakaran.

Tags : Chodhibwaram ,Sothaparam ,Yellow Dam ,Periyakulam ,Theni district ,Dinakaran ,
× RELATED அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2...