×

டிவி.யில தானே நீங்க வேலை பாக்குறீங்க…. மோடியிடம் சிறுமி கேள்வி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மக்களவை தொகுதி பாஜ எம்பி.யாக இருப்பவர் அனில் பிரோஜியா. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று இவர் தனது  மனைவி, மகளை நாடாளுமன்றத்துக்கு  அழைத்து வந்தார்.  மோடியை அவர்கள் சந்தித்தபோது, அனிலின் 8 வயது மகள் ஆஹானாவிடம், ‘நான் யார் என்று தெரியுமா?’ என மோடி கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘தெரியுமே… நீங்கள்தான் மோடிஜி. உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள்  டிவி.யில் தானே வேலை பார்க்கிறீர்கள்…’ என்று கேட்டாள். இதை கேட்ட சிரித்த மோடி. சிறுமிக்கு சாக்லேட்டுகளை கொடுத்து அனுப்பினார்….

The post டிவி.யில தானே நீங்க வேலை பாக்குறீங்க…. மோடியிடம் சிறுமி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Anil Birogiah ,BJP ,Ujjain ,Lok Sabha ,Madhya Pradesh ,
× RELATED மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை...