×

ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி காதல் முறிவு

மும்பை: ஷில்பா ஷெட்டியின் சகோதரியான ஷமிதா ஷெட்டி, தனது காதலன் ராகேஷ் பாபத்துடனான உறவு முறிந்து விட்டதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரியான ஷமிதா ஷெட்டி (43), நடிகர் ராகேஷ் பாபத் என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றால் போல், ராகேஷ் பாபத் – ஷமிதா ஷெட்டி ஜோடி, பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான உறவு திருமணம் வரை செல்லவில்லை. அதனால் இருவருக்கும் இடையிலான காதல் முறிவு குறித்த செய்தி கடந்த சில நாட்களாகவே உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இருவரும் பேசவில்லை. தற்போது ஷமிதா ஷெட்டி அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களுக்கு இடையிலான விஷயத்தை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. நானும் ராகேஷ் பாபத்தும் ஒன்றாக இல்லை. கடந்த சில மாதங்களாக விலகி இருக்கிறோம். எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்….

The post ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி காதல் முறிவு appeared first on Dinakaran.

Tags : Shilpa Shetty ,Shamita Shetty ,Mumbai ,Rakesh Bapat ,Bollywood… ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….