×

குற்றாலம் மெயினருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சென்னை பெண் உட்பட 2 பேர் பலி

தென்காசி: குற்றாலம் மெயினருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள் இறந்தனர். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல் இல்லாத நிலையில் அருவிகளில் தண்ணீர் மிதமாகவே விழுந்தது. நேற்று மதியம் முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாலை 5 மணி முதல் மேக வெடிப்பு காரணமாக ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதன் காரணமாக மாலை 6.30 மணி அளவில் குற்றாலம் மெயினருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி குளித்துக் கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். ஆண்கள் பகுதியில் 4 பேரும், பெண்கள் பகுதியில் இருவரும் வெள்ளத்தில் சிக்கினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார், பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பகுதியில் விழுந்த 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால் பெண்கள் பகுதியில் விழுந்த இருவரை மீட்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் இறங்கி 2 பெண்களின் உடல்களையும் மீட்டனர். விசாரணையில் இவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்வர் ஷா காலனியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55), சென்னை பெரம்பூர் தேசிய காலனி ஜமாலியா நகரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (42) என்பது தெரியவந்தது….

The post குற்றாலம் மெயினருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சென்னை பெண் உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mainaruvi ,Tenkasy ,Mayinruvi ,
× RELATED அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என...