×

தாந்தோணிமலை வெங்கடரமணசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் தாந்தோணிமலையில் புகழ்பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களிலும், மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடைபெறும் தெப்பத் தேரோட்டம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்வுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தெப்பத்திருவிழா நடைபெறும் வகையில் கோயில் முன்பாக தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பத்திருவிழா இந்த குளத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் புற்கள் அதிகளவு வளர்ந்து, தண்ணீருக்கு மேலேயே தெரியும் அளவுக்கு உள்ளது.இதனை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெப்பக்குளத்தை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தாந்தோணிமலை வெங்கடரமணசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dandonimalai Venkadaramanaswamy Temple Deeppakkulam ,Karur ,Dandonimalai Kallyana Venkatramana Swami Temple ,Dandonimalai ,Dandonimalai Venkadaramanaswamy Temple ,Deepakkulam ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது