×

அதிக விலைக்கு சாப்பாடு விற்ற ஓட்டலில் அதிகாரிகள் ரெய்டு; உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு கடைகள் உள்பட அனைத்து கடைகளும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தது. குறிப்பாக, 4வது பிளாட்பாரத்தில் உள்ள தோசை கபேயில் புளி, சாம்பார் சாதம் ஆகியவை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுபற்றி பில் ஆதாரத்துடன் தமிழ்முரசு நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், நேற்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிஎம்டிஏ செயற்பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். குறிப்பாக அதிக விலைக்கு புளி, சாம்பார் சாதம் விற்பனை செய்த கடையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் உணவுகள் கூடுதலாக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று கேட்டறிந்தனர். இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி கூறும்போது, ‘’ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் அதிக விலையில் உணவு விற்கப்பட்டால் நேரடியாக எங்களிடம் புகார் தெரிவிக்கலாம். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். ‘கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். பொருட்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அதிக விலைக்கு சாப்பாடு விற்ற ஓட்டலில் அதிகாரிகள் ரெய்டு; உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annagar ,Chennai Coimbedu Bus Station ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...