×

கொரோனாவுக்கு பிறகு விற்பனை அதிகரிப்பு தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது: மாசு ஏற்படுத்தாத ‘எலக்ட்ரிக்’ வாகனங்களுக்கும் மவுசு

சென்னை: கொரோனாவுக்கு பிறகு வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக, மின்சாரத்தில் இயக்கும் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் மக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகர்ப்புறங்களில் வாகன பெருக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையே, கடந்த 2020, 21ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.எனவே அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதன் காரணமாக, வாகனங்களின் விற்பனையும், பயன்பாடும் முற்றிலும் குறைந்தது. பிறகு அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் முழுமையாக செயல்பட தொடங்கியது. அந்தவகையில், ஆட்டோ மொபைல் துறையும் வழங்கமான நிலைக்கு திரும்பியுள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு காரணமாக வாகனங்கள் வாங்குவதை தவிர்த்து வந்த மக்கள் தற்போது மீண்டும் வாங்க தொடங்கியதால் நடப்பாண்டில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 9,72,079 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 3,00,30,635 ஆக அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது நடப்பாண்டில் இதுவரை 35,690 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த 2021ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 30,035 ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 7 மாதங்களிலேயே கடந்த ஆண்டை விட அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதே காரணம். இருப்பினும் பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகம்தான். ஆனால், அன்றாட பெட்ரோல் செலவைக் கணக்கிடும்போது, மின்சார வாகனங்கள்தான் சிறந்தவையாக இருக்கிறது.தமிழகத்தில் வாகன விற்பனைஆண்டு    பதிவு செய்யப்பட்டவாகனங்கள்2018    21,14,434 2019    19,68,4302020    14,92,3012021    15,14,8702022 (இதுவரை)    9,72,079மொத்தம் (இதுவரை)    3,00,30,635ஆண்டு    விற்பனை2018    1,3282019    3,4442020    5,6972021    30,0352022 (இதுவரை)    35,690…

The post கொரோனாவுக்கு பிறகு விற்பனை அதிகரிப்பு தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது: மாசு ஏற்படுத்தாத ‘எலக்ட்ரிக்’ வாகனங்களுக்கும் மவுசு appeared first on Dinakaran.

Tags : Corona ,Nadu ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...