×

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (26). தனியார் டெலிபோன் வயர் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு, நூம்பல் பகுதியில் டெலிபோன் வயர் பதிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் உதவியாளர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார். புளியம்பேடு பகுதியில் வந்தபோது இரு சக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் ஸ்டீபனை வழிமறித்து வெட்ட முயன்றனர். அவர்களிடமிருந்து ஸ்டீபன் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த உதவியாளர் லேசான காயத்துடன் தப்பினார். தகவலறிந்த பூந்தமல்லி போலீஸ் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் மற்றும் போலீசார் வந்து ஸ்டீபன், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்டீபனுடன் வந்து காயமடைந்த உதவியாளரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரிடமும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  விசாரணையில் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த எபினேசர், கிருபாகரன், திருப்பதி உள்ளிட்ட 6 பேர் ஸ்டீபனை வெட்டி கொலை செய்ததாக  தெரியவந்துள்ளது. தொழில் போட்டியா, முன்விரோதமா அல்லது கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்தும் கொலையாளிகளை போலீசார் தேடு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

The post நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Stephen Raj ,Vellavedu ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...