×

இன்று 3வது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா: தடுத்து நிறுத்துமா வெஸ்ட் இண்டீஸ்

டிரினிடாட்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3வது ஒருநாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள  இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 3 ரன் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும்  போராடி வென்ற இந்தியா 2-0  என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது.இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. முதல் 2 போட்டியிலும் கடைசி ஓவர் வரை கடுமையாகப் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றிக்காக வரிந்துகட்டும் நிலையில், ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 0-3 என ஓயிட்வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ், மீண்டும் அதே வகையிலான படுதோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. முதல் 2 போட்டியிலும் 300+ ஸ்கோர்களை அடித்தது அந்த அணிக்கு சற்று தன்னம்பிக்கை கொடுத்தாலும், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை தடுத்து நிறுத்துவது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.  இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது….

The post இன்று 3வது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா: தடுத்து நிறுத்துமா வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Trinidad ,Port ,of Spain ,Queen's Park Oval ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...