×

நெமிலி ஒன்றியத்தில் தொடர் மழை தெருக்களில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்-கால்வாய் அமைக்க கோரிக்கை

நெமிலி : நெமிலி ஒன்றியத்தில் தொடர் மழையால் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நெமிலி ஒன்றியத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்த மழையால் கிராமங்களில் உள்ள சாலைகள், தெருக்களில் அதிகளவு வெள்ளம் ஓடுகிறது. பல இடங்களில் ெதருக்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ேதங்கியுள்ள மழைநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.நெமிலி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கியுள்ளது. கால்வாய் வசதி கேட்டு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்தவேண்டும். அனைத்து பகுதிகளிலும் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தெருக்களில், சாலைகளில் தண்ணீர் தேங்காதபடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post நெமிலி ஒன்றியத்தில் தொடர் மழை தெருக்களில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்-கால்வாய் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nemili Union ,Nemili ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...