×

நவீன வரவுகளால் நலிவுற்ற கிடுகு தொழில்

* வாழ்வாதாரம் இன்றி தவிப்பு* அரசு நிதியுதவி வேண்டும்தொண்டி : தொண்டி,தெற்கு தோப்பு, புதுப்பட்டிணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த காலங்களில் மிகவும் செழிப்பாக நடைபெற்ற கிடுகு தொழில், தற்போது போதிய வரவேற்பின்றி மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளது. இதனை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். தென்னை மர கிடுகுகள் மனித வாழ்வில் இணைந்த ஒன்று. கலாச்சாரத்தின் அங்கமாகவும் இருக்கிறது. ஒரு பெண் வயதிற்கு வந்ததும் முதன் முதலில் தாய் மாமன் குச்சு கட்ட இந்த தட்டியையே பயன்படுத்துகின்றனர். இன்றும் சில கிராமங்களில் இது பழமை மாறாமல் உள்ளது. கடந்த காலங்களில் ஒரு குடிசையாவது வாழ்வில் கட்டி விடவேண்டும் என ஒவ்வொரும் முடிவு எடுத்திருப்பர். இதை ஒரு குடிசை தொழிலாக தோப்பில் தங்கி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து வந்தது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் பெரும் பாலும் அதிகமாக குடிசைகளே காணப்பட்டது. அப்போது இந்த தட்டி முடையும் தொழில் மிகவும் பரபரப்பாக இருந்தது. திருமணத்திற்கு பந்தல் போட, கோவில் திருவிழாவிற்கு பந்தல் போட என வாடகைக்கும் இந்த கிடுகு தொழில் நடைபெற்றது. சொந்தமாக குடிசை வீடு கட்டுபவர்கள் மொத்தமாக விலைக்கு வாங்கி சென்றனர். கிராமங்களில் தென்னை மரங்கள் அதிகமாக இருந்தாலும் ஊருக்கு வெளியே தென்னந்தோப்புகள் அனைத்து ஊரிலும் இருந்ததாலும், தென்னங் கிடுகுகள் தட்டுப்பாடின்றி அதிகம் கிடைத்தது. இத்தொழில் பார்ப்பதற்ககாக தினக் கூலிக்கும் ஆட்கள் சென்றனர். கிடுகு பின்னுவது, வாகனங்களில் கொண்டு செல்வது என நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலால் பல குடும்பங்கள் வாழ்வு கண்டது. கால மாற்றத்தின் காரணமாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரையிலும் காங்கிரிட் வீடுகள் கட்ட துவங்கியதால் கிடுகு தட்டிகளின் தேவை குறைய துவங்கியது. குடிசை வீடுகளை பார்ப்பது தற்போது அரிதாகி விட்டது. மொட்டை மாடிகளில் குடில் அமைத்தனர். அதன் பின்னர் அதையும் தவிர்த்து சீட் போட ஆரம்பத்தனர். இதனால் மேலும் தொழில் நலிவுற்றது. கோவில் திருவிழா, திருமணமத்திற்கு என வாடகைக்கு எடுத்தவர்களும் தற்போது நவீன ரகத்திற்கு தகர சீட் மற்றும் சாமியான பந்தலுக்கு மாறி விட்டனர். கால மாற்றம், இயற்கை பேரிடர், புயல் மழையால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் அழிந்து விட்டது. அதனால் கிடுகு கிடைப்பதும் சிரமமாக உள்ளது. பல வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வழியில்லாமல், இருக்கும் தொழிலை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்வி குறியாக உள்ளது. இத்தொழில் செய்யும் தொண்டி தோப்பு முத்தம்மாள் கூறியது, ‘‘20 வருடங்களுக்கு மேலாக தட்டி முடையும் வேலை பார்த்து வருகிறேன். முழு கிடுகை வங்கி அதை மூன்று நாள்களுக்கு மேல் தண்ணீரில் ஊர வைத்து நல்லா ஊரியதும் இரண்டாக கிழித்து தட்டி பின்னுவோம். ஆரம்பத்தில் தொழில் நன்றாக இருந்தது. மதுரை, நாகபட்டிணம் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து கிடுகு லோடு லாரிகளில் வரும். அதில் அதிகமாக கழிவு வரும். அதனால் நஷ்டமாக இருந்தாலும் அப்போது ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்து விடுகிறது. வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக உள்ளது. அரசு எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு வாழ்வாதர நிதி உதவி செய்ய வேண்டும்’’ என்றார். சுதா கூறியது, 50 ஆயிரத்திற்கு லோடு வந்தால் கிடுகை ஊர வைக்க குளங்களில் தண்ணீர் இல்லாத காலங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீர் வாங்க வேண்டும். மேலும் தட்டி முடைய கூலி வேறு கொடுக்க வேண்டும். போதிய வரவேற்பு இல்லாததால் தொழில் நலிவுற்று விட்டது. …

The post நவீன வரவுகளால் நலிவுற்ற கிடுகு தொழில் appeared first on Dinakaran.

Tags : Tondi ,South Grove ,Novapattina ,Round District ,Dinakaraan ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்