×

நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.692 கோடி ஊழல்?: ஈபிஎஸ் மீது புதிய ஊழல் புகார்..அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் புதிய புகார் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கவனித்த போது டெண்டர் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தஞ்சை கோட்டத்தில் சாலைகளை மேம்படுத்த 2020ல் வழங்கப்பட்ட 3 டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.692 கோடி ஊழல்?டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. சாலைகளை மேம்படுத்துவதற்காக வழக்கமான தொகையைவிட அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி ஆர்.ஆர்., எஸ்.பி.கே., கே.சி.பி. போன்ற நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை ஊழல் மூலம் ரூ.500 கோடி வருமானமா?3 நிறுவன அதிபர்களின் வீடுகளில் நடந்த ஐ.டி. ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் ஆர்.ஆர்., எஸ்.பி.கே., கே.சி.பி. நிறுவனங்களுக்கே வழங்கியதாகவும், உரிய தகுதியில்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அறப்போர் இயக்கம் புகார் கூறியுள்ளது. கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் இந்த நிறுவனங்கள் செய்த பணிகளில் இருந்து கிடைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஐ.டி. சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்க:ஐ.டி. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சோதனைக்கு ஆளான எஸ்.பி.கே. அதிபர் நாகராஜன் செய்யாதுரை, பழனிசாமி சம்பந்தியின் தொழில் கூட்டாளி. எனவே எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர்களுடன் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஊழல்: புதிய வழக்கு பதிய கோரிக்கை டெண்டர் முறைகேட்டில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் பழனி, கண்ணன், செந்திலுக்கும் தொடர்பு இருக்கிறது. முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை கோட்டத்தில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக 2020ல் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. அதிமுக ஆட்சியில் ஊழல் புகார் எழுந்ததால் சில டெண்டர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. கோவை, சிவகங்கை மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. …

The post நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.692 கோடி ஊழல்?: ஈபிஎஸ் மீது புதிய ஊழல் புகார்..அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : EPS ,CHENNAI ,Arapor Movement ,AIADMK ,Dinakaran ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்