×

தண்டையார்பேட்டையில் பணிமனை இடமாற்றம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம்-4க்கு (தண்டையார்பேட்டை) உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலக பணிமனை-39 தற்போது கதவு எண்.4/6, செரியன் நகர் பிரதான சாலை, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை – 600 081 என்ற முகவரியில்  இயங்கி வருகிறது. இந்த பணிமனை வரும் 28ம் தேதி (வியாழக்கிழமை) முதல் புதிய முகவரியான கதவு எண்.10, கிராஸ் ரோடு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை – 600 081 என்ற இடத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்தவும் இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் உதவி பொறியாளரை 8144930039, 8144930040 என்ற எண்களிலும், துணை பகுதி பொறியாளரை 8144930210 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்….

The post தண்டையார்பேட்டையில் பணிமனை இடமாற்றம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet ,Chennai ,Chennai Metropolitan Water Supply and Sewerage Board ,Thandayarpettai ,Thandaiyarpettai ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...