×

செஸ் போட்டிக்காக தேவனேரியில் 5ஜிக்கு இணையாக தற்காலிக செல்போன் டவர்: மாமல்லபுரத்தில் போலீஸ் குவிப்பு

மாமல்லபுரம்: செஸ் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் 5 ஜிக்கு இணையாக தற்காலிக செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலியம்பியாட் போட்டி வரும் 29ம் தொடங்க உள்ளது. இதற்கு, ‘5ஜி’க்கு இணையான நெட்ஒர்க் தேவைப்படும் என சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் தேவனேரி ஒரு தற்காலிக செல்போன் டவரும், போட்டி நடைபெறும் ரிசார்ட்டுக்கு அருகே இரண்டு தற்காலிமாக செல்போன் டவர் என மூன்று செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 4ஜி வயர்லெஸ், பொது பாதுகாப்பு ரேடார் போன்ற வசதியுடன் கூடிய அதிவேக இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டு அதை கூட்டமைப்பினர் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில், அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், பிரிட்டன், தென்கொரியா, ஹாங்காங் போன்ற நாட்டு வீரர்கள் அங்கு நொடிக்கு 7ஜிபி வேகம் கொண்ட 5ஜி தொழில் நுட்பம் போன்ற ‘ஏர் ஒய்பைவ்’ பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான, போன்களைதான் வெளிநாட்டினர் வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில், அவர்கள் 4ஜி பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். அதற்கு, மாற்றுவழி என்ன? என்ற கேள்வி தற்போது கூட்டமைப்பினரிடம் எழுந்துள்ளது. இது குறித்து, தொலைத்தொடர்பு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இணையதள வேகம் என்பது வெவ்வேறு நாடுகளில் வேறுபாடாக இருக்கும். உலகத்திலேயே, இணையதள வேகம் 44 எம்பிபிஎஸ் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை, பொறுத்தவரை 9.31 எம்பிபிஎஸ் வேகம் தான் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பிட்ட, சில நாடுகளில் அங்குள்ள தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் புதுப்புது பெயர்களில் அங்கிகாரம் இல்லாத 5ஜி தொழில்நுட்ப போனுடன், 5ஜி நெட்ஒர்க் இணையான ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும் இணையவழி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். அதில், வாகன வேகம், அதன் பாதுகாப்பு, எரிசக்கி சேமிப்பு, சுற்றுச்சூழல், பேரிடர், பாதுகாப்பு, காலநிலை, விளையாட்டு, ஜூம் மீட்டிங், இவைகளை துள்ளியமாக கையாளுவது அவர்களது வழக்கமாக உள்ளது.இரண்டு, வாரங்கள் மாமல்லபுரத்தில் தங்கும் 187 நாட்டு செஸ் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், தூதர்கள், விஐபிகள் மற்றும் உறவினர்கள் அவர்களின் நாட்டு இணையதள வேகத்தையே இங்கு பயன்படுத்த முயற்சி செய்வார்கள். அதற்கு, இந்தியாவில் உள்ள 4ஜி இணையதள சேவை ஈடுகொடுப்பது மிக சிரமாக இருக்கும்’ என தெரிவித்தார். ந்த நிலையில், தற்போது, போட்டி நடைபெறும் இடம், மாமல்லபுரம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, பணிக்காக 4 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்….

The post செஸ் போட்டிக்காக தேவனேரியில் 5ஜிக்கு இணையாக தற்காலிக செல்போன் டவர்: மாமல்லபுரத்தில் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Devaneri ,Mamallapuram ,Mamallapura ,International ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்