×

சேலம் விஐபியின் செயலால் கோபத்தின் உச்சிக்குப் போன தெர்மாகோலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சியின் ஆட்களை இரு தரப்பும் நீக்குவதால், கட்சி கலகலத்து போய் இருக்கிறதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை  கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை காரணமாக சேலத்துக்காரர், தேனிக்காரர்  தனித்தனியாக இருக்காங்க. இதனால் டெல்டா மாவட்டத்தில் நிர்வாகிகள்,  ெதாண்டர்கள் யார் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் பல பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கிறார்களாம். இதற்கிடையில் சேலத்துக்காரர்,  தேனிக்காரர் ஆகியோர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை மாறி மாறி நீக்கி  வருகின்றனர். இலைகட்சியில் எந்த பக்கம் செல்வது என்ற புரியாமல் தவித்து வருகிறார்கள். இடைக்கால பொறுப்பு என்ற பெயரில் சேலம்காரர் நீக்கியவர்களை, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் தேனிகாரர் தன் பக்கம் சேர்த்து வருகிறார். இதனால நிர்வாகிகள், தொண்டர்கள் தேனிக்காரர்,  சேலத்துக்காரர் ஆகியோர் மீது கடும் கோபத்தில்  இருந்து வருகிறார்களாம். காரணம், இடைக்கால பொறுப்பு என்ற கோப்பு தேர்தல் ஆணையத்தில் பெண்டிங்கில் இருக்கிறது. அது ரிஜக்ட் ஆனாலோ, தாமதம் ஆனாலோ 2024 எலக்‌ஷன்ல சின்னத்துல நிற்க முடியாது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக தேர்தல் ஆணையத்தில் ெகாடுத்தது இன்னும் உயிரோடு இருக்க வைக்கும் முயற்சியில் தேனிகாரர் இறங்கி இருக்கிறார். இதனால் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருப்பதை தொண்டர்கள் வெறுக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய மாஜி  நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து விரைவில்,  இலைகட்சியில் பிரிந்து கிடக்கும் இரண்டு தலைமைக்கும் அதிர்ச்சி வைத்தியம்  கொடுக்கவும் முடிவு  செய்துள்ளார்களாம். ஆனால், அவர்கள் எந்த கட்சிக்கு போவார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகர மாவட்டத்துல இலை கட்சி தலைவர்கள் எல்லாம் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறார்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘இலை கட்சியில், ஒற்றைத்தலைமைக்கு முதலில் ஆதரவு கொடுக்காமல், இரட்டை தலைமை மட்டுமே வேண்டும் என குரல் கொடுத்தவர் தெர்மகோல். ஆனால், இவர் சார்ந்த அந்த சமுதாய தலைவருக்கு ஆதரவு இல்லை என்பதை அறிந்த பின்னர், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என குரல் கொடுத்து, நடுநிலை வகிப்பதாக சொல்லி வந்தார். சேலத்துக்காரர் கை ஓங்கியவுடன், வேறுவழியின்றி, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். சட்டமன்றத்தில் இலை கட்சியின் எம்எல்ஏக்களின் துணைத்தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என தென்மாவட்ட எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். இதில், மதுரையில் சீனியர் இலை பிரமுகர் என்ற முறையில் தனக்கு கிடைக்கும் என தெர்மகோல் ஆவலுடன் காத்திருந்தாராம். ஆனால், இவர் எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விடுவார் எனக் கருதி அவரின் அரசியல் எதிரியும், தனக்கு விசுவாசமானவருமான உதயமானவருக்கு அந்தப் பதவியை வழங்கியிருக்கிறார் சேலத்துக்காரர். இதனால், தெர்மகோலும், செல்லமான எம்எல்ஏவும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஏற்கனவே மதுரையில் மூன்று மாவட்டச்செயலாளர்களும், மூன்று திசையில் நின்று கூவுகின்றனர். உதயமானவருக்கு ஏற்கனவே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகள் இவர் வசம் இருக்கும்போது, தற்போது சட்டமன்ற துணைத்தலைவர் பதவி கிடைத்ததால், கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். சீனியர்கள் இருக்கும் போது, இளையவரான உதயமானவருக்கு இவ்வளவு பதவியா? எப்படி கொடுக்கலாம் என சேலத்துக்காரர் மீது தெர்மகோலும், செல்லமானவரும் கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். சேலத்துக்காரருக்கு செக் வைக்க வேண்டும் என நினைத்த தெர்மகோல், இப்போது நிருபர்களிடம் பேட்டி கொடுக்கும் போதெல்லாம், கட்சியை விட்டு, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் எனக் கூறுவதுடன், ஏற்கனவே, இதுபோல், பிரிந்து சென்றவர்களை உதாரணம் காட்டி பேசி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வட்டார  போக்குவரத்து அலுவலகத்துக்கு போனா தலையே சுத்துதாமே, அது எந்த மாவட்டத்துல இருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர்  மாமா.  ‘‘சென்னை புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்களிடம் அங்கிருக்கும் புரோக்கர்கள்,  டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் நைசாக பேச்சு கொடுக்கிறாங்க. அப்புறம்,  நாங்க உங்க வேலையை முடிச்சு தருகிறோம்னு கூறி அவர்கள் கொண்டுவரும்  விண்ணப்பங்களை வாங்கிக்கிட்டு அதற்கு கூடுதலா பணம் வைத்து வேலையை கச்சிதமா  முடிச்சு கொடுக்குறாங்களாம். நோ காத்திருப்பு, நோ ரிஜக்ட் என்பதால் பொதுமக்கள் சிலர் அவர்களையே நாடுகிறார்களாம். ஆனால், புரோக்கருக்கு பணம் தர இயலாதவர்கள்,  அல்லது ஆட்டோ  டிரைவர்களோ நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலர்களை சந்தித்து முடித்துக்  கொள்ளலாம் நினைக்கிறாங்க. அப்படி போனவங்களின் பைல்கள் நாள், வாரம், மாத கணக்குல இழுத்தடிக்கிறாங்களாம். இதற்காக வேலையை விட்டுட்டு பல மணிநேரம் காத்திருந்தாலும் எந்த பலனும் இல்லையாம்.   இதனால அங்குள்ள புரோக்கர்கள் எங்கள் மூலமா சென்றால்தான் வேலை எளிதாக  முடியும். நேரடியா போனால் இப்படித்தான் என்று கர்வமாக சொல்றாங்களாம். பொதுமக்கள் அலைச்சலை தவிர்க்க பணத்தை தந்து வேலையை முடிக்கிறாங்களாம். பணம் கொடுக்க  முடியாத ஆட்டோ டிரைவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க தான்  பெரிதும் பாதிக்கப்படுறாங்க…’’ என்று வேதனையுடன் சொன்னார் விக்கியானந்தா. …

The post சேலம் விஐபியின் செயலால் கோபத்தின் உச்சிக்குப் போன தெர்மாகோலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Wiki Yananda ,Thermocol ,Salem VIP ,Leaf Party ,Uncle ,Peter ,leaf ,Thermakol ,Dinakaran ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...