×

கடம்பத்தூர் ஒன்றியத்தில் இலவச திறன் பயிற்சி

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் இளைஞர்களுக்கான திறன்களை வளர்க்கும் வகையில், இலவச பயிற்சி திட்டத்தை சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஓராசிரியர் பள்ளிகளின் சேர்மன் வேதாந்தம் தலைமை வகித்தார். கவுரவ செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி வரவேற்றார். விழாவில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைவர் கே.என்.கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் அகிலா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 5 பெண்களுக்கு முதற்கட்டமாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி, கணினி பயிற்சி, வெப் டிசைனிங், மொபைல் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிஎன்பிஎஸ்சி, டெட் வகுப்புகள், இருசக்கர வாகன மெக்கானிசம், ஏசி, ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிசம், பிட்டர், பம்ப் மெக்கானிக், மொபைல் சர்வீஸ் போன்ற அனைத்து திறன்களும் இலவசமாக கற்றுக் கொடுத்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது….

The post கடம்பத்தூர் ஒன்றியத்தில் இலவச திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kadambatur Union ,Tiruvallur ,Swami Vivekananda Grama ,Kadambathur Union ,Uluntha ,Swami Vivekananda Gram ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...