×

வெள்ளாரை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு: அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை

ஸ்ரீபெரும்புதூர்: வெள்ளாரை பகுதியில் சாலையை இருபக்கமும் சிலர்ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குறுகலான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பல முறை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் கொளத்தூர், மேட்டு கொளத்தூர், நாவலூர், வெள்ளாரை, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது இப்பகுதி சார்ந்த பொதுமக்கள் ஒரகடம், வல்லம்-வடகால் ஆகிய பகுதிகளில் உள்ள தனியா தொழிற்சாலைகளுக்கு செல்ல கொளத்தூர்- கண்ணன்தாங்கல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரகடம், வல்லம்-வடகால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் அதன் சுற்றுட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஒரு வழிச்சாலையாக உள்ள இந்த சாலை வெள்ளாரை பகுதியில் சாலையின் இருபுறமும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து செய்து முள்வேலி அமைத்துள்ளனர். இதனால் ஏற்கனவே குறுகளாக இருக்கும் இந்த சாலையில் வெள்ளாரை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பினால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வெள்ளாரை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைக்கபட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாரை பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post வெள்ளாரை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு: அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை appeared first on Dinakaran.

Tags : Velarai ,Ignorant Highways Department ,Sriperumbudur ,Vellarai ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...