×

உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெற பாஜ அல்லாத மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

சென்னை: உணவு பொருட்கள் மீதான வரிவிதிப்பை திரும்ப  பெற தமிழகம் உள்ளிட்ட பாஜ அல்லாத மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் சமூக பாதுகாப்பு மாநாடு சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு  மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது தலைமை தாங்கினார். சென்னை மண்டல தலைவர் ஃபக்கீர் முஹம்மது வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப், மாநில செயலாளர்கள் நாகூர் மீரான், சாகுல் ஹமீது, பொருளாளர் இப்ராஹிம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் அனீஸ் அஹமது, மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், திருநாவுக்கரசர் எம்பி, இ.முஸ்லீம் லீக் மாநில துணைத்தலைவர் நவாஸ்கனி, விசிக வன்னி அரசு, வீரபாண்டியன், நிஜாம் முகைதீன், மன்சூர் காசிஃபி, கும்பகோனம் சுவாமிகள் திருவடி குடில் அடிகளார், நாகை திருவள்ளுவன், முஹம்மது முனீர், பாலன், ஆபிரூதீன் மன்பயீ, ஏ.கே. முஹம்மது ஹனீபா, ஆசியா மரியம், அஸ்ரப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான வரிவிதிப்பினை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பாஜ அல்லாத மாநில அரசுகள் இது விசயத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும்உள்ளிட்ட 14 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. …

The post உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெற பாஜ அல்லாத மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் மாநாட்டில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Baja ,Popular Prant Conference ,Chennai ,Tamil Nadu ,-Baja ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...