×

கோயில் நிலங்களை குத்தகைக்கு விட விற்பனை செய்ய தடை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில் நிலங்களை அரசு துறைகளுக்கு குத்தகை மற்றும் விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 45 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு மன்னர் காலம் முதல் பல லட்சம் கோடி மதிப்பிலான இடங்கள், நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. பல கோயில்களின் நிலங்கள் எங்கெங்கு உள்ளன என்ற முறையான ஆவணங்கள் இல்லை. இதைப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதே போன்று ‘புறம்போக்காக’ கருதி அரசு நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளது. இதை நீதிமன்றம் வரை சென்று போராடி, அந்த இடத்தை அறநிலையத்துறை மீட்க வேண்டியுள்ளது.இந்நிலையில்,  தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியது. தற்போது வரை மூவாயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் பயன்படுத்த முடியாத, ஆக்கிரமித்து பயன்பாட்டில் உள்ள இடங்களை, பொது நோக்கத்திற்காக விற்கவும் அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ விடவும் நீதிமன்றம் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் மற்றொரு தீர்ப்பில் அறநிலையத்துறை நிலங்களை ஒப்படைக்க ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அறநிலையத்துறை நிலங்களை தற்காலிகமாக விற்பனை செய்ய தடை விதித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயில் நிலங்களை இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 34ன் கீழ் விற்பனை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாறுபட்ட தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்நேருவில் தெளிவுரைகள் கோரப்பட்டுள்ள நிலையில் திரும்ப பெற்று கொள்ளப்படுகிறது. …

The post கோயில் நிலங்களை குத்தகைக்கு விட விற்பனை செய்ய தடை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Kumaragurupara ,Chennai ,Kumaragurubaran ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...