×

மாணவ- மாணவிகளின் புடைசூழ தமிழகம் வந்தது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி..!!

கோவை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி தமிழகம் வந்தடைந்தது. கோவை வந்துள்ள ஜோதிக்கு பலரும் வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முதன்முறையாக சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28- ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.  இதில் 187 நாடுகளைச் சோந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். இந்த ஜோதியானது நாடு முழுவதும் பயணித்து, நேற்று புதுச்சேரியை வந்தடைந்த நிலையில், இன்று காலை கோவை மாவட்டம் பந்தயசாலை பகுதிக்கு வந்தது. இதற்கென சிறப்பு வரவேற்பு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்தை வரவேற்று, மலர் தூவி, சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் புடைசூழ, இசை நிகழ்ச்சிகளுடன், ஒலிம்பியாட் தீபம் என்பது மாரத்தான் போட்டியாக வரவேற்று ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு பந்தயசாலையில் இருந்து கொடீசியா வரை மாரத்தான் தீபம் செல்கிறது. அதன்பின், அங்கு பல்வேறு நிகழ்வின் வாயிலாக ஒலிம்பியாட் தீபத்தை வரவேற்று, பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறவும் உள்ளது. அதன்பின், சேலம் மாவட்டத்திற்கு மதியம் 1 மணியளவில் செல்ல உள்ளது.  …

The post மாணவ- மாணவிகளின் புடைசூழ தமிழகம் வந்தது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி..!! appeared first on Dinakaran.

Tags : Pudisulva ,Tamil ,Nadu ,44th Chess Olympiad tournament ,Govai ,Chess Olympiad ,Tamil Nadu ,Goa ,Badisulva ,44th Chess Olympiad Match ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...