முத்துப்பேட்டை : புதிய ஆப் பயன்படுத்தி நூதன மோசடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம் என்று முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகனந்தம் கூறியுள்ளார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகனந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பரவலாக ஆண்களை ஹோமா செக்ஸ்க்கு அழைப்பதற்காகவே grindr- gay chat என்ற ஆப் ஒன்று உருவாக்கப்பட்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆப் மூலம் பலர் போலியாக இணைந்து பலரை ஹோமா செக்ஸ்க்கு அழைக்கப்பட்டு பல்வேறு வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமின்றி, திருமணமாகியவர்களும் ஏமாந்து தங்களது பணம் மற்றும் பொருட்களையும் இழந்து வருகின்றனர்.இந்தநிலையில் முத்துப்பேட்டை பகுதியில் சமீபகாலமாக grindr- gay chat என்ற ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்து மோசடி நடந்து வருகிறது. இதில் சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் ஏமாந்து தனது நகை, விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரொக்கம் பணம் ஆகிவை இழந்து உள்ளார்.இந்தநிலையில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து எனக்கு ஒரு ஆண் தேவை என்று பதிவு செய்தால் போதும். அவரை பலரும் தொடர்பு கொண்டு பயன்படுத்திக்கொள்வார்கள். இப்படி செய்திகளை பகிர்வதை மற்றவர்களும் இதனை பார்க்கலாம். அதன் மூலம் அவர்களும் மற்றவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஒருவரை ஹோமா செக்ஸ்க்கு அழைக்க ஒருகாலத்தில் ரொம்ப சிரமமாக இருந்தது போய் தற்போது ஈசியாக கையாளும் கருவியாக இந்த ஆப் பயன்படுத்தப்படுகிறது.இந்த ஆப்பை சில சமூக விரோதிகளும் பதிவிறக்கம் செய்து உள்ளே புகுந்து இதில் வரும் செய்திகளை பரிமாறும் மற்றவர்களை தினந்தோறும் கண்காணித்து யார்? நாம் அருகே உள்ளவர்கள் என்று கண்டுபிடித்து அவரை தொடர்புக்கொண்டு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அன்றாடம் நூதன முறையில் கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் ஏமாறுபவர்கள் வெளியில் சொன்னால் அசிங்கம் என கருதி சொல்ல முடியாமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.இதன் மூலம் கொள்ளை சம்பவம் மட்டுமின்றி கொலை சம்பவம் கூட நடைபெறலாம். இந்த ஆப் மூலம் பலரது வாழ்க்கையில் கூட பிரச்சனைகள் ஏற்பட்டு கணவன், மனைவி பிரிந்து வருகின்றனர். பல இடங்களில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு கூட தள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த ஆப்பை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அப்படி இந்த ஆப் மூலம் யாரேனும் எமார்ந்தால் உடன் எனது செல்போன் எண்:7010899678 நம்பரை தொடர்புக்கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை தொடர்புக்கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் செய்பவர்கள் யார்? என்பதை ரகசியம் காக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடந்தாலும் எந்தநேரமும் தயக்கமின்றி தொடர்புக்கொண்டு புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு டிஎஸ்பி விவேகானந்தம் கூறினார்….
The post புதிய ஆப் பயன்படுத்தி நூதன மோசடி தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்-முத்துப்பேட்டை டிஎஸ்பி பேட்டி appeared first on Dinakaran.