×

கோவையில் குரூப் 4 தேர்வை 57 ஆயிரம் பேர் எழுதினர்

கோவை :  கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வினை 57 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் உள்ள 247 தேர்வு மையங்களில் நடந்தது. இதனை 76 ஆயிரத்து 787 பேர் எழுத இருந்தனர். இதற்காக, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பாக சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு பணியில் 104 மொபைல் அலுவலர்கள், 247 தேர்வுகூட ஆய்வு அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 12 கண்காணிப்பு அலுவலர்கள், 17 பறக்கும்படை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோபதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும், தேர்வு கூடத்திற்கு காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வந்தடைந்தனர். அவர்களை, 8.50 மணியளவில் தேர்வறைக்குள் அனுமதித்தனர். பின்னர், தேர்வர்களுக்கு ஒ.எம்.ஆர் தாள் வழங்கப்பட்டது. அதில், தேர்வர்கள் விடை அளித்தனர். இந்த தேர்வினை கோவை மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 57 ஆயிரத்து 72 பேர் எழுதினர். 19 ஆயிரத்து 715 பேர் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வில் தமிழ், பொது அறிவு தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இருப்பினும், சமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வை விட குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் கடினமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்….

The post கோவையில் குரூப் 4 தேர்வை 57 ஆயிரம் பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Personnel Examination Nadu ,TP ,
× RELATED கர்நாடக மூத்த அரசியல் தலைவர் டி.பி.சந்திரேகவுடா காலமானார்