×

கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக பணம் வசூலித்த ஊழல் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து, விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிஎஸ்ஐ பேராயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மாணவ, மாணவிகள் வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி மாணவ, மாணவியரிடம் இருந்து பிஷப் தர்மராஜ் ரசலாம் தலைமையில் ஒரு குழு பல கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர். மேலும், நிர்வாகம் வாங்கியதாகக் கூறிய அந்த குழு, கல்லூரியில் இடம் வழங்காத நிலையில், இதில் பிஷப்-க்கு தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்து மாணவ, மாணவிகள் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள எல்.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பிஷப் தலைமை அலுவலகம், காரக்கோணம் மருத்துவக் கல்லூரி, நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள முன்னாள் நிர்வாகி இல்லம், செறியக் கொல்லா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகி இல்லம் என நான்கு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே பல கோடி ரூபாய் முறைகேடு புகார் தொடர்பாக, பிஷப் உட்பட நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ள இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் இலங்கையில் உள்ள சிஎஸ்ஐ அமைப்புகளுக்கு தலைமையிடமாக திருவனந்தபுரம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

The post கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala State Thiruvananthapuram M.M. ,CSI Enforcement ,Thiruvananthapuram ,Thiruvananthapuram, Kerala ,CSI Church ,Karakonam Medical College ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!