×

சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் கந்தசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.!

சென்னை: சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சென்னை, கந்தக்கோட்டம், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்பேரில் சென்னை மண்டலம் 1ற்கு உட்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (25.07.2022) கந்தக்கோட்டம், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது திருக்கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர்ப்புக் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை, கந்தக்கோட்டம், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் சென்னை மண்டலத்தில் உள்ள அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் சென்னை மண்டல இணை ஆணையர் திரு.ந.தனபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, குடியிருப்பு வசதி போன்ற கோரிக்கைகள் முன்வைத்தனர். இவர்களின் கோரிக்கைகள் விதிமுறைகளுக்குட்பட்டு பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது….

The post சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் கந்தசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.! appeared first on Dinakaran.

Tags : Chennai zone ,Kandaswamy ,CHENNAI ,Arulmiku Kandaswamy Temple ,Kandhakottam, Chennai ,Tamil Nadu ,Kandaswamy temple ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தலைமுடி காணிக்கை ரூ.53.62 லட்சம் ஏலம்