×

உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

ஓரிகான்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஏழாவது இடம் பிடித்தார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. முன்னதாக நடந்த ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் தங்கம் வென்று சாதிப்பார்களா இந்திய வீரர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி உள்ளது. 7வது இடம்: நேற்று நடந்த மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையாளரான அன்னு ராணி பங்கேற்றார். இவர் 61.12 மீட்டர்  தூரம் மட்டுமே வீசி 7வது இடம் பிடித்தார். இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் கெல்சி லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் வரை வீசி  தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர் வெள்ளி (64.05 மீ), ஜப்பானின்  ஹருகா ஹிடாகிச்சி வெண்கலம் (63.27 மீ) வென்றனர். …

The post உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? appeared first on Dinakaran.

Tags : World Athletics Championships ,Will Neeraj Chopra ,Oregon ,India ,Anunrani ,javelin ,Neeraj Chopra ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக...