×

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிப்பட்டன: பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதி

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் பேரூாட்சியில் 100க்கும்  மேற்பட்ட அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் நிம்பதி பெருமூச்சு அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் பேரூராட்சிகுட்பட்ட வெங்கடேசபுரம், இராவத்தநல்லூர், நேருநகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள், வியாபாரிகள், வீடுகளில் சிறிய அளவிலான தோட்டங்கள் வைத்திருக்கும் குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.இதில் குறிப்பாக, வீட்டு தோட்டங்களில் இருக்கும் காய்கறிகள், வாழை மற்றும் தென்னை மரங்களில் உள்ள இளநீர், தேங்காய் போன்றவற்றை பறித்து சென்றும் அல்லது சேதப்படுத்தியும் உள்ளது. சில நேரங்களில் வீட்டிற்குள்ளேயே ஜன்னல் வழியாக புகுந்து, பிரிட்ஜ் திறந்து அதில் உள்ள பொருட்கள் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு நிலைகளில் இந்த குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இவை அனைத்தையும் விட மோசமாக பள்ளி மாணவர்கள், மாணவிகள் மதிய உணவுக்காக கொண்டு செல்லும் உணவையும் பறித்து செல்லும் சூழ்நிலையும் இப்பகுதியில் அதிகரித்திருந்தது.இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். எனவே, அப்பகுதியை சேர்ந்த, மக்கள் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் நலன் கருதி,  அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில் பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், துணை தலைவர் வி.டி.ஆர்.வி எழிலரசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அச்சிறுபாக்கம்  வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் நேற்று முன்தினம் இந்த, குறும்பு கார குரங்குகளை வெங்கடேசபுதூர், ராவுத்தநல்லூர் பகுதிகளில் கூண்டு வைத்தனர். குரங்குகளை பிடிக்கும் செயலில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை லாவகமாக பிடித்தனர். பின்னர், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் வனப்பகுதியில் அவைகள் உயிர் வாழ்வதற்கு வசதியான இடங்களில் விடப்பட்டது. இதனால், பொது மக்கள் வியாபாரிகள் நிம்பதி அடைந்தனர். …

The post அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிப்பட்டன: பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Achirubakkam ,Achirubakkam district ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா