×

கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மாநில எல்லைப்பகுதியில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

பந்தலூர் : பந்தலூர் அருகே வயநாடு பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரளா மாநிலம் வயநாடு  மாவட்டம் மானந்தவாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பன்றி பண்ணையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பன்றிக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பண்ணையில் இருக்கும் அனைத்து பன்றிகளையும் கொன்று எரிக்கும் நடவடிக்கையில் கேரளா கால்நடை பராமரிப்பு துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில் தமிழக எல்லை பகுதியான பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் பாட்ட வயல்,  சேரம்பாடி, சப்பந்தோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்  பன்றி  பண்ணைகளை நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நீலவண்ணன் உத்தரவின் பேரில் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஏதேனும் நோய் தாக்கம் உள்ளதா என  ஆய்வு செய்வதாக தெரிவித்தார். நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் காவண்யா மற்றும் கால்நடை துறையினர் குந்தலாடி பகுதியில் உள்ள பன்றி பண்ணையை ஆய்வு செய்து பன்றிகளுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து  வருகின்றனர். சம்பவம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி நீலவண்ணன் கூறுகையில் இந்த நோய் மனிதனை தாக்காது. பன்றிகளை தாக்கும்.கேரளாவில் நோய் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்….

The post கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மாநில எல்லைப்பகுதியில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bandalur ,Tamil Nadu ,Vayanad ,Dinakaran ,
× RELATED சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை...