×

மூணாறில் படகு சவாரி தொடக்கம்-சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு : மூணாறில் கனமழை குறைந்து படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், கனமழை பெய்தும் பலத்த காற்றும் வீசி வந்தது. இந்நிலையில், டி.டி.பி.சி ஹைடல் மற்றும் பிறதுறைகளின் கீழ் இயங்கும் படகு சவாரி மையங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. மாவட்டத்தில் மழை குறைந்ததையடுத்து, படகு சவாரி மையங்களை நேற்று முன்தினம் முதல் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இரண்டு வார இடைவெளிக்கு பின், மீண்டும் படகு சவாரி துவங்கியுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா மூலம் தான் பெரும்பான்மையான வருமானம் கிடைக்கிறது. படகு சவாரி துவங்கியதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து மாட்டுப்பெட்டி, குண்டளை, செங்குளம் உள்ளிட்ட படகு சவாரி செல்கின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post மூணாறில் படகு சவாரி தொடக்கம்-சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Moonar—tourists ,Moonaru ,Kerala State ,Ikkki ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...