×

நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

விருத்தாசலம்,: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள வெண்கறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் விஜயகாந்த்(23). பிசிஏ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு கிளினிக்கில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகள் வசந்தி(22). இவர் நர்சிங் முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஹெல்த் கேர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் குறித்து அறிந்த வசந்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் வேறு ஒரு இளைஞருடன் வசந்திக்கு திருமணம் செய்து வைக்க கடந்த 11.7.2022 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற 1.9.2022 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய வசந்தி, காதலன் விஜயகாந்த் உடன் நேற்று விருத்தாசலத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் கழுத்தில் மாலையுடன் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயினை சந்தித்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். அதனை தொடர்ந்து மனுவை ஏற்றுக் கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர் இரு வீட்டாரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர்….

The post நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Vruddasalam ,Vijayakanth ,Ghanavel ,Venkadumpur ,Pendanadam ,Vrutshasalam, Cuddalore district ,PCA ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...