×

அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்கும் குரங்கம்மை!: குழந்தைகள், சிசுக்களுக்கு பரவும் தொற்று.. கலிபோர்னியாவில் 2 குழந்தைகள் பாதிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் குழந்தைகளுக்கு இடையேயும் குரங்கம்மை பரவி வருவதை அந்நாட்டு சுகாதாரத்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். உலகம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை, கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவிலும் அடியெடுத்து வைத்தது. நைஜீரியாவில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கு வந்த ஒருவர் மூலமாக அந்நாட்டில் குரங்கம்மை பரவ தொடங்கியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கு குரங்கம்மை பரவியது. தற்போது வரை அமெரிக்காவில் 44 மாகாணங்களில் சுமார் 1,500 பேருக்கு இந்த நோய் உறுதியாகி இருக்கிறது. பெரும்பாலும் பெரியவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் பச்சிளம் குழந்தைகளுக்கும் குரங்கம்மை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தை ஒன்றுக்கும், பச்சிளம் குழந்தை ஒன்றுக்கும் குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் குரங்கம்மை தொற்று நோயை சமாளிப்பதில் அமெரிக்க அரசு போதுமான அளவு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். …

The post அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்கும் குரங்கம்மை!: குழந்தைகள், சிசுக்களுக்கு பரவும் தொற்று.. கலிபோர்னியாவில் 2 குழந்தைகள் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : California ,Washington ,United States ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...