ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா ?

பொதுவாக இரண்டு வகை ஹோமங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. ஒன்று நம்முடைய குடும்ப நலனிற்காகவும், செல்வ வளங்களை பெறுவதற்காகவும் வீட்டில் நடத்தப்படும் ஹோமம். இதனை காம்ய ஹோமம் என்று கூறுவதுண்டு. அடுத்து உலக நலனிற்காகவும், உலக மக்களின் சுபீட்சத்திற்காகவும், மழை போன்றவற்றை வேண்டியும் கோவில் போன்ற பொது இடங்களில் நடத்தப்படும் ஹோமம். இதனை நைமித்திக ஹோமம் என்று கூறுவர். அந்த வகையில் ஒருவரது வீட்டில் செல்வம் பெறுக, ஐஷ்வர்ய லட்சுமி நிலைபெற செய்யும் ஹோமங்களில் ஒன்று குபேர லட்சுமி ஹோமம் ஆகும்.

குபேர லட்சுமி ஹோமமானது சில நேரங்களில் கோவில்களிலும் செய்யப்படுவதுண்டு. அதில் கலந்துகொள்ளும் அனைவரும் பயன்பெறும் வகையில் அந்த ஹோமங்கள் நடத்தப்படுவதுண்டு. ஒருவருக்கு குபேரன் செல்வதை அள்ளித்தரும் வல்லமை கொண்டிருந்தாலும் கூட செல்வத்திற்கு கடவுளாக விளங்குபவர் மாக லட்சுமியே. ஆகையால் வீட்டில் செல்வம் நிலைக்க குபேரனின் அருளோடு மக லட்சுமியின் அருளை பெறுவது அவசியம் ஆகிறது. அத்தகைய அருளை பெற்றுத்தரும் வல்லமை குபேர லட்சுமி ஹோமத்திற்கு உண்டு.

குபேர லட்சுமி ஹோமத்தினை வீட்டில் செய்தால் அந்த வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நம் வசமாகும். தீராத நோய்கள் தீரும். இப்படி எண்ணிலடங்கா பல அற்புத பலன்களை தரவல்லது குபேர லட்சுமி ஹோமம். இந்த ஹோமத்தினை முறையாக செய்வது அவசியம். ஆகையால் ஹோமம் செய்வதற்கான தகுந்த நபரை சரியாக கண்டறிந்து ஹோமத்தை செய்தால் பலன் நிச்சயம் உண்டு. இந்த ஹோமத்தினை செய்ய இயலாதவர்கள் குபேரனுக்குரிய மந்திரத்தையும் மக லட்சுமிக்குரிய மந்திரத்தையும் தினமும் கூறி வழிபடலாம். அதனாலும் நல்ல பலன் உண்டு.

Related Stories: