×

தேவாரத்தில் குறைந்த மிளகாய் விவசாயம்

தேவாரம் :  தேவாரம் பகுதியில் மிளகாய் விவசாயம் குறைந்து உள்ளது. தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, மலையடிவாரங்களை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் பச்சைமிளகாய் விவசாயம் செய்யப்பட்டது. மிளகாய் குறிப்பிட்ட காலங்களில் பறிக்காதபோது, வத்தலாக மாறிவிடும். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, பச்சை மிளகாய் விவசாயம் குறைந்துள்ளது. விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம், குறைந்துபோனதாலும், கிணறுகளில் தண்ணீர் அதிகம் இல்லாததாலும் குறைந்துள்ளது. மிளகாய் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டிய தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் போனதால், பச்சை மிளகாய் விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். இதனால் கூலித்தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் குறைந்துள்ளது. விவசாய வருமானமும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே தேவாரம் பகுதியில் மிளகாய் விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post தேவாரத்தில் குறைந்த மிளகாய் விவசாயம் appeared first on Dinakaran.

Tags : Dewar ,Dewaram ,Devaram ,Pannapuram ,Gompai ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு