×

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகுட்பட்ட வெங்கடேசபுரம், ராவத்தநல்லூர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள், வியாபாரிகள், வீடுகளில் சிறிய அளவிலான தோட்டங்கள் வைத்திருக்கும் குடியிருப்பு வாசிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வீட்டு தோட்டங்களில் இருக்கும் காய்கறிகள், வாழை மற்றும் தென்னை மரங்களில் உள்ள இளநீர், தேங்காய் போன்றவற்றை பறித்து செல்வது, சேதப்படுத்துவது, சில நேரங்களில் ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் புகுந்து ஃப்ரிட்ஜை திறந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து செல்வது போன்ற அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. தவிர, பள்ளி மாணவர்களின் மதிய உணவை பறித்து செல்லும் சூழ்நிலையும் காணப்படுகிறது. குரங்குகளை பிடிக்க செல்ல இப்பகுதி மக்கள் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர். இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில் பேரூராட்சி தலைவர் நந்தினி, துணைத் தலைவர் வி.டி.ஆர்.வி எழிலரசன், உறுப்பினர்கள் முன்னிலையில் அச்சிறுப்பாக்கம் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் வெங்கடேசபுதூர், ராவுத்தநல்லூர் பகுதிகளில் கூண்டு வைத்து, தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட குரங்குகளை பிடித்து அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் வனப்பகுதியில் விட்டனர்….

The post அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Achirupakkam Municipal Corporation ,Venkatesapuram ,Ravathanallur ,Nehru Nagar ,Achirupakkam Municipality ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் வாகன...