×

உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை நீக்க வேண்டும்: முதல் முறையாக ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:ஜிஎஸ்டியின் 47 வது கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு கோதுமை மாவு பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள் காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் என்ற காரணத்தால், தாய்மார்கள் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பல பொருட்கள் வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களை குறிப்பாக, தாய்மார்களைப் பெரிதும் பாதிக்கும். உணவுப் பொருட்கள் மீதான இந்த வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலையும், ஒன்றிய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்….

The post உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை நீக்க வேண்டும்: முதல் முறையாக ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Union Government ,Chennai ,Edupati Palanisami ,Dinakaran ,
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்