×

குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடு

“ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்” இறுதிவரை துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து இறுதியில் தெய்வீக ஞானத்தை அடைவதே “திருமணம்” எனும் புனித சடங்கின் நோக்கமாக இருக்கிறது. இல்லற வாழ்வில் இணைந்து வாழ ஆரம்பிக்கும் ஆண், பெண் ஆகிய இருவருக்கிடையே சில பிரச்சனைகள் ஏற்பட தான் செய்யும். ஆனால் சில தம்பதிகளுக்குள் தினமும் ஏதாவது ஒருவகையில் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படுகின்றன. அத்தகைய சச்சரவுகள் நீங்கி தம்பதிகள் ஒற்றுமையாக வாழ வழிசெய்யும் ஆன்மீக பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட ரீதியில் பார்க்கும் போது ஆண், பெண் ஜாதகங்களில் லக்னத்திற்கு 7 ஆம் இடம் என்பது களஸ்திரம் எனப்படும் வாழ்க்கை துணையை பற்றி கூறும் இடமாக இருக்கிறது. ஜாதகத்தில் இந்த ஏழாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பவர்களுக்கும், இந்த 7 ஆம் இடத்தில் சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருப்பதாலும் திருமண வாழ்வில் தம்பதிகளுக்கிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் கொண்டே இருக்கும். ஜாதகத்தில் இத்தகைய நிலை இருந்தாலும் அனுபவம் வாய்ந்த ஆன்மீக பெருமக்களால் கூறப்பட்ட பரிகாரமுறையை திட நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நல்ல பலன்களை பெறலாம் என்பது அனுபவசாலிகளின் வாக்காகும்.

தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மனஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகளை போக்கும் சக்தி வாய்ந்த தெய்வங்களாக இருப்பது சிவ பெருமான் மற்றும் பார்வதி ஆவர். திருமணத்திற்கு பிறகு கணவருடன் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு மனவேதனை அடையும் பெண்கள் உங்கள் பகுதியில் இருக்கும் காளி தேவி, சக்தி, அம்பாள் ஆகிய பெண் தெய்வங்களின் ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகள் சென்று, இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி வந்தால் கணவனுடன் சண்டைகள் ஏதும் ஏற்படாமல் தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்கும்.

மனைவியுடன் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மன நிம்மதி இழக்கும் கணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பிரிந்து வாழ்தல், மணமுறிவு போன்ற முடிவுகளை எடுக்காமல், ஒவ்வொரு மாதத்திலும் வரும் “உத்திர” நட்சத்திரம் தினத்தில், சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு காட்டப்படும் தீபாராதனையின் போது கண்களை மூடி வணங்காமல், தீபாராதனை செய்யப்படுவதை முழுமையாக கண்குளிர கண்டு சிவபெருமானை தரிசிக்க வேண்டும். இது போன்று ஒவ்வொரு மாதமும் இந்த பரிகார முறையை செய்து வர மனைவியால் சண்டை சச்சரவுகள் ஏதும் வராமல் இணைபிரியா தம்பதிகளாக வாழலாம்.

Tags :
× RELATED பிரிந்த தம்பதியர் ஒன்றுகூட மணிகண்டீசர்