×

புரட்டாசி மாதத்தில் புது தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை தெரியுமா?

சொந்தமாக தொழில், வியாபாரங்கள் தொடங்குபவர்களுக்கு பல அனுகூலங்கள் இருக்கின்றன. அந்நபர்கள் அவர்களுக்குண்டான பணிசூழல், நேரம் போன்றவற்றை அவர்களே நிர்ணயிக்க முடிகிறது. மற்ற வேலைகளில் இருப்பவர்களை விட அதிக சுதந்திரம் இருப்பதோடு மற்றும் அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடிகிறது. புது தொழில், வியாபாரம் போன்றவற்றை தொடங்கி மிகுந்த செல்வம் ஈட்ட நினைப்பவர்கள், அத்தொழில்களை துவக்க சுப மாதம், நாள், நேரம் போன்றவற்றில் துவங்கவே விரும்புவர். பெரும்பாலானவர்களுக்கு “புரட்டாசி” மாதத்தில் புது தொழில், வியாபாரம் போன்றவற்றை தொடங்குவதை பற்றிய சில சந்தேகங்கள் இருக்கிறது. அவற்றுக்கான விளக்கங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.புரட்டாசி மாதம் என்பது சூரியன் “கன்னி” ராசியில் பிரவேசிக்கும் காலம் ஆகும். “கன்னி” ராசி பெருமாளுக்குரிய ராசியாகும் எனவே இந்த மாதம் முழுவதும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டு நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்கின்ற ஒரு மாதமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது “மிதுன ராசியில் வரும் ஆடி மாதம், கன்னி ராசியில் வருகின்ற புரட்டாசி மாதம், தனுசு ராசியில் வருகின்ற மார்கழி மாதம், மீன ராசியில் வருகின்றன பங்குனி மாதம்” ஆகிய நான்கு மாதங்களும் “அழித்தல்” அதாவது நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்க இறைவழிபாடு, விரதம் போன்றவற்றை மேற்கொள்ளும் மாதங்களாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த மாதங்களில் புது தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை தொடங்கினால் அவை மேன்மையடையாமல் நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்கிற அனுபவரீதியான ஜோதிட கணிப்புகள் காரணமாகவும் , மேற்கூறிய நான்கு மாதங்களில் குறிப்பாக “புரட்டாசி” மாதத்தில் புது தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை தொடங்காமல் இருக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த புரட்டாசி மாதத்தில் புதிதாக தொழில், வியாபாரங்களை தொடங்குவதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபடலாம். புதிய தொழில், வியாபாரங்களை தொடங்க நினைப்பவர்கள் “தை, சித்திரை, ஆவணி” போன்ற “ஆக்கல்” சக்தி அதிகம் கொண்ட மாதங்களில் தொடங்கினால், அவர்களின் தொழில் வியாபாரங்கள் போன்றவவை மேலும், மேலும் விருத்தியடைந்து பன்மடங்கு லாபங்களை பெற்று தரும். புரட்டாசிக்கு அடுத்து வரும் மாதங்களில் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை தொடங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள், புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து , திருப்பதி சென்று பத்மாவதி தாயார் மற்றும் வெங்கடேஸ்வரரை வணங்கி,தொழில் மூலம் வரும் முதல் லாபத்தில் பாதியை அல்லது உங்களால் விரும்பிய அளவு பங்கை பெருமாளுக்கு தருவதாக வேண்டி கொண்டு தொடங்கினால் நல்ல லாபங்களை பெற முடியும். பெருமாளுக்கு வேண்டிய படி காணிக்கை செலுத்திவிட வேண்டும் என்பது முக்கியம்.

Tags : businesses ,
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...