×

2ஐ தொடர்ந்து புஷ்பா 3ம் பாகம்: பஹத் பாசில் தகவல்

ஐதராபாத், : ‘புஷ்பா’ படத்தின் 3ம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் பஹத் பாசில் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, சமந்தா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில், ‘புஷ்பா’ 2ம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு இந்தியாவில்உள்ள அடர்ந்த காடுகள் மற்றும்  அதைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும், பிறகு கிழக்கிந்திய ஆசிய நாடுகளிலும்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலையாள நடிகரும், சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்தவருமான பஹத் பாசில், ‘புஷ்பா’ முதல் பாகத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய அவர், 2ம் பாகத்தில் அல்லு அர்ஜூனுடன் கடுமையாக மோதுவது போல் சுகுமார் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் பஹத் பாசில் அளித்த பேட்டியில், ‘டைரக்டர் சுகுமார் முதலில் என்னிடம் கதை சொன்னபோது, புஷ்பா ஒரு பாகத்தில் மட்டுமே இருந்தார். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதியில் என் பங்களிப்பிற்கு பிறகு இரண்டு பாகங்களாக மாறியது. சமீபத்தில் சுகுமார் என்னிடம் பேசியபோது, ‘புஷ்பா’ 3ம் பாகத்திற்கும் தயாராக இருங்கள் என்று சொன்னார். காரணம், அதற்கான கதையையும் அவர் உருவாக்கி வைத்துள்ளார்’ என்று சொன்னார்….

The post 2ஐ தொடர்ந்து புஷ்பா 3ம் பாகம்: பஹத் பாசில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bahat Basil ,Hyderabad ,Bahad Basil ,Allu ,Sukumar… ,Pushpa ,
× RELATED ஆவேசம் பட பாணியில் காருக்குள் நீச்சல்...