×

டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம்: கண்டக்டரை தாக்கிய மாணவர்கள் கைது

தண்டையார்பேட்டை: டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரமடைந்து கண்டக்டரை தாக்கிய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். உயர் நீதிமன்றத்தில் இருந்து மணலி நோக்கி (தடம் எண் 44) மாநகர பேருந்து நேற்று காலை திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்தபோது தியாகராய கல்லூரியில் மாணவர்கள் பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்து நடத்துனர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன்(42) அவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். அதற்கு மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீரென  சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியை சேர்ந்த பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வரும் சிபிசக்கரவர்த்தி(19), வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கவுதம்(19) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம்: கண்டக்டரை தாக்கிய மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Manali ,Court ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...