×

திருச்சி முகாம் சிறையில் 57 பவுன் நகை, 2.52 லட்சம் 90 செல்போன்கள் பறிமுதல்: என்ஐஏ சோதனை

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சென்னை, கொச்சினில் இருந்து வந்த ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி ஆகியோர் தலைமையிலான என்.ஐ.ஏ., (தேசிய பாதுகாப்பு முகமை) அதிகாரிகள் 20 பேர் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஏகே 47 ரக துப்பாக்கியுடன் சிஆர்பிஎப் வீரர்கள் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இலங்கை தமிழர்களான குணா(எ)குணசேகரன், பூங்கொடி கண்ணன், திலீபன், ஸ்டான்லி கென்னடி பெர்னான்டே, காமினி, சுரங்காபிரதீப், வருஷ்ணன், பண்டாரன், நலிம், தனுக்கா ரோஷன், ரூபன் ஆகியோரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து குணசேகரனை அடிக்கடி வந்து பார்த்து சென்ற திருச்சி பொன்மலை அடிவாரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் வீட்டிற்கு வந்து 3 மணி நேரம் சோதனை நடத்தினர். பின்னர் அவரை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டு முகாம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், முகாமிற்கு சென்று மனு போட்டு குணசேகரன் உள்பட அவரது நண்பர்கள் 7 பேருக்கும் உணவு மற்றும் பொருட்களை வெளியே இருந்து வாங்கி கொடுப்பது, பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றுக்கு உதவி செய்வது போன்ற வேலைகளை செய்துவந்துள்ளார்.சோதனை நடப்பதை அறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முகாம் சிறைக்கு சென்றார். தொடர்ந்து சோதனை மாலை 6.30 மணி வரை 14.30 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் 2லட்சத்து 52 ஆயிரம், 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம்கார்டுகள், ஒரு லேப்டாப், ஒரு பென் டிரைவ் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த சோதனை குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் வந்த படகில் இந்திய கடலோர காவல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். இதில் படகிலிருந்து 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைதாகினர். இவர்களுக்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த படகிலிருந்த ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி முகாமில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு நகைகள், பணம், செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசாரால் கைதான விக்னேஷ்குமார் முகாம் சிறையில்  அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் முகாமிற்கு  சென்று அவரது நண்பர்கள் 7 பேருக்கும் பாஸ்போர்ட், விசா  உள்ளிட்டவற்றுக்கு உதவி செய்துள்ளார்….

The post திருச்சி முகாம் சிறையில் 57 பவுன் நகை, 2.52 லட்சம் 90 செல்போன்கள் பறிமுதல்: என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy Camp ,NIA ,Trichy ,Trichi Central Jail ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்