×

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்குபின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: திருத்தணி கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவின்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். ஆடி கிருத்திகையை முன்னிட்டு 21.07.2022 முதல் 25.07.2022 வரை ஐந்து நாட்கள் வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சுழற்சி முறையில் செய்துதரப்படும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முழுமையாக ஏற்பாடுகள் செய்துதரப்படும். அதேபோல ஐந்து நாட்களும் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். முடிக்காணிக்கையும் இலவசம். சிறப்பு பேருந்துகளை இயக்கிடவும், கூடுதல் ரயில்கள் இயக்கிடவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுழற்சி முறையில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்….

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,CHENNAI ,Tirukarthikai ,Tiruthani Subramania Swamy Temple ,Audi ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...