×

சிவசேனா எம்பிக்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி?

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததும், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜ ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது, எம்எல்ஏக்களை தொடர்ந்து 12 எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளனர். இவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கைப்படி, ராகுல் ஷெவாலேயை சிவசேனாவின் மக்களவை கட்சி தலைவராக செயல்பட சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். இதற்கிடையே ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்பிக்களில் 2 பேருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்க பாஜவுடன் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

The post சிவசேனா எம்பிக்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி? appeared first on Dinakaran.

Tags : Shivasena ,New Delhi ,Uddhav Takare ,Maharashtra ,Baja ,Egnath Shinde ,Union ,Dinakaran ,
× RELATED அஜித் பவார் கட்சியைத் தொடர்ந்து...