×

சம்மந்தம் கிராமத்தில் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்

புவனகிரி, :பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஈஷ்வர் ராஜலிங்கம் என்பவர் ஏராளமான பொருட்செலவில் உமைய பார்வதி சமேத மூலநாதர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதில் உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள், பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை 6ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 7.30 மணியளவில் பூஜையில் இருந்து புனித குடங்களில் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன், ஓய்வுபெற்ற சுங்க வரித்துறை இணை ஆணையர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகஸ்தியம் பவுண்டேஷன் ஈஷ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஷ்வர், லேக்நாத் ஈஷ்வர், ரிஷிநாத் ஈஷ்வர் மற்றும் சம்மந்தம் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Moolanathar Temple ,village ,Samantham ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...