×

காரைக்கால் அம்மையார் திருக்குள கரையில் திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் குளக்கரையில், கயிலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானம் மற்றும் பகவான் பக்த ஜன சபா சார்பில், நேற்று மாலை திருப்பதி நிவாசப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் கயிலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையிறா தேவஸ்தானம் மற்றும் பகவான் பக்த ஜன சபா இணைந்து, காரைக்கால் அம்மையார் கோவில் குளக்கரையில் தேவி, பூதேவி சமேத நிவாசப் பெருமாளின் 4ம் ஆண்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருப்பதியிலிருந்து காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்ட திருப்பதி பெருமாள் சிலைக்கு, நேற்று அதிகாலை காரைக்கால் அம்மையார் குளக்கரையில் திருமஞ்சன சேவை, தோமாலை சேவை நடத்தப்பட்டு மாகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை தேவி, பூதேவியாருடன் நிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதியில் நடைபெறுவது போன்ற ஊஞ்சல் சேவை இங்கும் நடைபெற்றது.

விழாவில், மாவட்ட முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்குமார் பன்வால், துணை கலெக்டர் பாஸ்கரன், முன்னாள் கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர், கயிலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், செயலாளர் துணைத்தலைவர் ஆறுமுகம், பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பகவான் பக்த சபா தலைவர் அமுதா ஆறுமுகம், துணைத்தலைவர் ரவிச்சந்ந்திரன், செயலாளர் பாரீஸ்ரவி, பொருளாளர் முத்துசாமி, இணை செயலாளர்கள் கோபிநாத், காசிநாதன், செய்தி தொடர்பாளர் ராகுல் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Thirupathi Perumal Swing Festival ,Karaikal ,
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி