×

மண்ணடியில் திடீர் சோதனை 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ1.5 லட்சம் அபராதம்

தண்டையார்பேட்டை: பாரிமுனை, பூக்கடை, மண்ணடி, சவுகார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக, சென்னை மாநகராட்சி 5வது மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மண்டல நல அலுவலர் வேல்முருகன் பகுதி சுகாதார அலுவலர்கள் மாப்பிள்ளை துரை, வாசுதேவன், சுகாதார ஆய்வாளர்கள் கவுசிக்ராஜ், சிவபாலன், இஸ்மாயில் உள்ளிட்டோர் நேற்று மேற்கண்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மண்ணடி பிடாரி கோயில் தெருவில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட 2 டன் பிளா ஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பாண்டிச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சென்னைக்கு கடத்தி வந்து, கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து, லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல், பாரிமுனை, பூக்கடை, மண்ணடி பகுதிகளில் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ1.25 லட்சம் அபராதம் விதித்தனர். …

The post மண்ணடியில் திடீர் சோதனை 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ1.5 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Mannadi ,Thandaiyarpet ,Parimuna ,Pukkadai ,Saukarpet ,Rayapuram ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...