×

சொத்து கேட்டு தாக்கியதால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது

தண்டையார்பேட்டை,: ராயபுரம், சோமுசெட்டி தெரு, 3வது சந்து பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவர், வண்ணாரப்பேட்டை வேலாயுதபாண்டியன் தெருவில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி (37). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளால், அடிக்கடி குடித்துவிட்டு மனையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மனைவி முத்துலட்சுமிக்கு சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள சொத்தை விற்று பணம் தரும்படி கடந்த வருடம் நவம்பர் மாதம் அவரை அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரிடம் சமரசம் பேசிய அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அந்த சொத்தை விற்பது தொடர்பாக நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மனைவி முத்துலட்சுமியை சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, கணவனை தாக்கி கீழே தள்ளி, துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, முத்துலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post சொத்து கேட்டு தாக்கியதால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : SARAVANAN ,3rd Alley ,Rayapuram, Somusetti Street ,Velaydapandiyan street ,Dinakaran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!